திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (06:33 IST)

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அதிமுக எம்பிக்கள் அரசுக்கு ஆதரவு

நேற்று பாராளுமன்றத்தில் தெலுங்கு தேச கட்சி, மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 126 வாக்குகளும் தீர்மானத்திற்கு எதிராக 325 வாக்குகளும் கிடைத்தது. இந்த தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து மோடி ஆட்சி எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தொடர்கிறது.
 
முதலில் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதிலும் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் என 451 வாக்குகள் பதிவாகின. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். 
 
வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிமுக எம்பிக்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வாக்கெடுப்புக்கு முன் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் குறித்து ஆவேசமான கருத்துக்களை கூறினார். குறிப்பாக தீர்மானத்தை கொண்டு வந்த தெலுங்கு தேசம் குறித்து அவர் கூறியபோது, 'வாஜ்பாய் காலத்தில் 3 மாநிலங்கள் பிரிக்கப்பட்டன, அந்த மாநிலங்களில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திரா, தெலங்கானா என்று பிரிக்கப்பட்டதன் விளைவை தெலுங்கு தேசம் உணர்ந்துள்ளது' என்று கூறினார்.