வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மே 2024 (10:25 IST)

இன்று நீட் தேர்வு.. இப்பொழுதாவது ரகசியத்தை சொல்வாரா உதயநிதி.. ஆர்பி உதயகுமார் கேள்வி..!

udhayanidhi
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறிய நிலையில் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இப்பொழுதாவது அந்த ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் சொல்வாரா என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
நீட் தேர்வுக்கு எதிராக திமுக உட்பட பல கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் பேசினார். 
 
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் மூன்று நீட் தேர்வுகள் நடந்து விட்டன என்பதும் இன்னும் அந்த ரகசியத்தை அவர் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுவரை கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது:
 
 நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றால் நீட் தேர்வை ஒரே கையெழுத்திலே ரத்து செய்வோம் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின் மற்றும்  அவரது தந்தை  ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விடை காணவும், ரத்து செய்வதற்கு எந்த முயற்சி எடுக்கவில்லை. மக்களை திசை திருப்புகிற, ஏமாற்றுகிற வகையில் ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின்,ஒரு கோடி கையெழுத்தை பெற்று அதை எங்கே இருந்தது குப்பை கூடத்தில் தான். ஒரு கையெழுத்து ரகசியம் என்று கூறி ஒரு கோடி கையெழுத்து பெற்ற ரகசியம் மர்மம் என்ன?. ட் தேர்வு ரத்து ரகசியம் என சொன்ன உதயநிதி ஸ்டாலின் அவர்களே எப்போது வெளியிடப் போகிறீர்கள்? ஒரு கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று சொன்ன அந்த ரகசியத்தை எப்போது உடைக்க போகிறீர்கள்? எப்போது மக்களிடத்தில் வெளியிடப் போகிறீர்கள் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

Edited by Siva