ஊடகங்கள் குறித்து பேசியது பேசியதுதான் – ராமதாஸ் அதிரடி !
பத்திரிக்கையாளர்கள் குறித்து கூறியக் கருத்தை மாற்றப்போவதில்லை என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் இலக்கிய அணி சார்பாஅக தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் நடத்திய “வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்” என்னும் கருத்தரங்கு சென்னை அடையாறில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கல்ந்து கொண்டு பேசினார். அப்போது அவர் “பத்திரிக்கையாளர்கள் நான் மரம் வெட்டியதை பற்றியே தொடர்ந்து கேட்கிறார்கள். கல்கத்தாவில் இருந்து வருவது டெலிகிராப் பத்திரிக்கை. அதன் நிருபர் கேட்கிறான் ”சார் நீங்க மரம் வெட்டுனீங்களே ஏன்?” என்று. நான் இதற்கு 100 முறையாவது பதில் சொல்லியிருப்பேன். மறுபடி மறுபடி ஏன் அதையே கேட்கிறீர்கள் என்றேன்.
அதற்கு ஒருவன் “101வது தடவையாக பதில் சொல்லுங்களேன்” என கிண்டல் செய்கிறான். ”ஏன்டா நாய்களா இதை விட கேவலமா திட்டணுமா? ராமதாஸ் மரம் வெட்டினான்னு தெரியாத மக்களுக்கும் தெரியணும் அதுக்குதானே அதையே கேக்கறீங்க. இனிமேல் மரத்தை வெட்ட மாட்டேன். மரத்தை வெட்டுனியா?னு கேட்பவனை தான் வெட்டுவேன்” என்று பதில் சொன்னேன்” என பேசினார். மேலும் அவர் “மரத்தை வெட்டினேன்னு சொல்றவனெல்லாம் என் வீட்டுக்கு வந்து பாருங்கடா எவ்வளவு மரம் வளர்த்து வெச்சிருக்கேன்னு தெரியும்” எனவும் பேசியுள்ளார்.
இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியது தொடர்பாக ராமதாஸ் மீது பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்து அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால் இது சம்மந்தமாக பாமக வழக்கறிஞர்கள் பொதுக்குழுவில் பேசியபோது ‘பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியது பேசியதுதான். என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. இளவரசன் விவகாரத்தில் இளவரசனின் தற்கொலையை பெரிதுபடுத்திய ஊடகங்கள் ஏன் திவ்யாவின் தந்தையின் தற்கொலை பற்றி செய்தி வெளியிடவில்லை’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.