திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (12:30 IST)

ரஜினி வைத்த நெகடிவ் டிவிஸ்ட்... மா.செ.க்களின் ஒபினியன் என்ன??

மாவட்டச் செயலாளர்கள் ரஜினி முதல்வராவதையே விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
விரைவில் கட்சி தொடங்க போவதாக சில வருடங்களுக்கு முன்பே அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடித்தப்படியே அரசியல் நுழைவுக்கான பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ராகேவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 
 
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில விஷயங்களில் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறினார். ஆனால் அது என்ன விஷயம் என்பதை பிறகு கூறுவதாகவும் கூறினார். இதனிடையே ரஜினி ஏமாற்றம் அடைந்ததாக கூறிய விஅஷ்யம் என்னவென தகவல் வெளியாகி வருகின்றன. 
ஆம், ரஜினி முதல்வர் பதவியை ஏற்க போவதில்லை என தெரிவித்துள்ளதாகவும், கட்சியிலிருந்து தகுதியான நபர் ஒருவர் முதல்வர் பதவியை வகிப்பார் என கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனையே ரஜினி தனிப்பட்ட ஏமாற்றம் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால், 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றால் ரஜினிகாந்த் தான் முதலமைச்சர் என்று தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார். இவர மட்டுமின்றி பல மாவட்டச் செயலாளர்கள் ரஜினி முதல்வராவதையே விரும்புவதாகவும் தெரிகிறது.