அரசியல் எப்போது? மீ டூ விவகாரம் - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
மீ டூ விவகாரத்தை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடித்து விட்டு இன்று காலை வாரணாசியில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பெண்களுக்குகு சம உரிமை வேண்டும் என்பதில் வேறு கருத்து இல்லை. ஆனால், காலம் காலமாக பின்பற்றப்படும் ஐதிகம் பாதுகாக்கப்பட வேண்டும். சடங்குகளில் நீதிமன்றம் தலையிடாமல் இருப்பது நல்லது. டிச.12ம் தேதி அரசியல் கட்சி பற்றி அறிவிக்கப்போவதில்லை. ஆனால், கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் தயாராக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
மீ டூ இயக்கம் பெண்களுக்கு தேவையானதுதான். ஆனால், அதை தவறாக பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.