Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயந்துட்டியா_கொமாரு: மருமகன் டயலாக் மாமனாருக்கு..!! தம்பிகள் அட்ராசிட்டி!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 12 மார்ச் 2020 (15:20 IST)
சமுக வலைத்தளமான டிவிட்டரில் #பயந்துட்டியா_கொமாரு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
 
தான் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி, படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய ரஜினி, நிர்வாகிகளால் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்தார். அதை பிறகு சொல்வதாக கூறியிருந்தார்.   
 
இந்நிலையில் இன்று லீலா பேலஸில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனது ஏமாற்றம் என்ன தற்போது தனது அரசியலுக்கு அவர் வைத்துள்ள திட்டம் என்னவென விளக்கம் அளித்தார். இதனோடு தனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை எனவும் கூறினார்.  
 
இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, முதலமைச்சர் பதவி மீது எனக்கு ஒரு போதும் ஆசை வந்தது இல்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு பிரதமர் உள்ளிட்டோர் இரண்டு முறை அழைத்து கேட்டும் முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிவிட்டேன்.  
 
முதலமைச்சர் பதவி மீது எனக்கு எப்போதும் எண்ணம் ஏற்பட்டது இல்லை. இளைஞனாக, படித்தவனாக, தொலைநோக்கு பார்வை உள்ளவனாக இருப்பவனை முதலமைச்சராக உட்கார வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என பேசினார். 
 
பேசுவதை எல்லாம் பேசிவிட்டு கடைசியாக மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி தெரிந்தபிறகு அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்நிலையில் சமுக வலைத்தளமான டிவிட்டரில் #பயந்துட்டியா_கொமாரு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
 
தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என சீமான் கூறியதற்கு பயந்தே முதல்வர் பதவிக்கு ரஜினி ஆசைப்படவில்லை என பேசி வருகின்றனர். 

எல்லாம் காட்டு

இந்தியா - ரஷ்யா இடையே விரைவில் நேரடி ரயில் பாதை திட்டம்?!..

டேய் டேய் போடா!.. அப்படியே கிழிச்சிட்டாலும்!. கூல் சுரேஷுக்கு சீமான் பதிலடி!...

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!.. யார் யாரோயோ கோட்டைக்கு அனுப்பிட்டீங்க!. சீமான் கோபம்!..

அமெரிக்காவில் ரூ.1.61 லட்சம் கோடி செலவில் AI சிப் ஆலை!.. எலன் மஸ்க் பிளான் என்ன?..

இந்தியா, சீனாவுக்கு 100 சதவீத வரி!.. அமெரிக்க செனட்டில் நிறைவேறிய மசோதா!..

அடுத்த கட்டுரையில்
Show comments