Daily Horoscope
✕

7 மாவட்டங்களில் இன்னும் சிலமணி நேரங்களில் இடியுடன் கனமழை: வானிலை அறிவிப்பு

Written By Mahendran
Updated: திங்கள், 6 டிசம்பர் 2021 (19:42 IST)
இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று காலை தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இன்னும் 2 அல்லது 3 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
நெல்லை தென்காசி கடலூர் விழுப்புரம் நாகப்பட்டினம் திருவண்ணாமலை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments