மழைக்கு சான்ஸ் இருக்காம்..
தென் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் குமரி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.