1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (14:52 IST)

நடிகை குஷ்பு, கஸ்தூரி டுவிட்டரில் மோதல்...

நாட்டில், பாஜக அரசால், சமீபத்தில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பாஜக அரசுக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த விவகாரம் தொடர்பாக பிரபல நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி மோதிக் கொண்டனர்.
 
சமீப காலமாக, சமூக வலைதளங்களில் இயங்காமல் இருந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, இந்திய குடியுரிமை சட்ட விவகாரத்தை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட ஆரம்பித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

நம் நாட்டில்,  குடிமகன் யார் ? குடிமகன் அல்லாதோர் யார்  என பிரிக்க  நீங்கள் யார்? நம் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கும் ஆணைகளை தருவதற்கு  நீங்கள் யார் ? நீங்கள் இப்போது அகதிகள் என்று அழைப்பவர்கள் தான் உங்களை ஆட்சியில் அமர வைக்க வாக்களித்தவர்கள்.
 நாம் நாடு மதச்சார்பின்மையால் இருக்கிறது என தெரிவித்தார்.
 
இதற்குப்  பதிலடி தரும் வகையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், வாக்களிக்கபவர்கள் எப்படி அகதிகளாகவும் , அந்நியர்களகாவும் இருக்க முடியும்? நாட்டில் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களே ஓட்டுப்போட முடியும் என தெரிவித்தார்.
 
மேலும், நீங்கள் சி.ஏ.பி ( இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ) மற்றும் என்.ஆர்.சி இரண்டையும் பற்றி குழப்பி கொள்கிறீர்கள் என பதிவிட்டிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த குஷ்பு, நான் சி.ஏ.பி மற்றும் என்.ஆர். சி குறித்து கூறினேனா ? நீங்கள் ஓய்வெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.