Daily Horoscope

5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Written By siva
Updated: புதன், 21 ஜூலை 2021 (08:53 IST)
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மேலும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
ஜூலை 22, 23 24 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.
 
வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்துள்ளது. கிண்டி, வடபழனி வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments