ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 நவம்பர் 2023 (07:38 IST)

சென்னையில் விடிய விடிய மழை.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்து வருகிறது என்பதும் காலை விடிந்த பின்னும் பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னையில் விடிய விடிய மழை பெய்தாலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விடிய விடிய மழை பெய்தாலும் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் செயல்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது என்றாலும் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  அதே நேரத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும் சென்னையில் இடைவிடாத மழை பெய்து வரும் நிலையில் சாலையில் நீர் தேங்க கூடாது என்பதற்காக எல்லோருக்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் இருப்பதாகவும்  மழை நீர் தேங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று நீரை அகற்றி வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Edited by Siva