செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 4 ஜூலை 2024 (22:46 IST)

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்  ஜூலை 10-ம் நடைபெறுகிறது.  இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா,  பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில்  சி.அன்புமணி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
 
இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில், அந்த கட்சிகளின் வாக்குகளை பெற, மற்ற கட்சி வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

 
இந்த நிலையில்,  விக்கிரவாண்டியில் ஜுலை பத்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால், ஜூலை 8 முதல் 10ம் தேதி வரையிலும், அதேபோல வாக்கு எண்ணிகை நடைபெறும் ஜூலை 13ம் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 4 நாட்கள் மூட விழுப்புரம் ஆட்சியர்  சி. பழனி  உத்தரவிட்டுள்ளார்.