சென்னையில் அதிகாலை முதல் மழை! பள்ளிகளுக்கு விடுமுறையா?
அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை விடுமுறை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதால் கூடுதலாக விடப்பட்ட விடுமுறை ஆகியவை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இதனால் இன்று பள்ளிகளுக்கு செல்ல மாணவ மாணவிகள் தயாராக இருக்கும் நிலையில் திடீரென இன்று காலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திநகர், நுங்கம்பாக்கம், அசோக் நகர், சூளைமேடு, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது
சென்னையில் திடீர் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். சென்னையில் மழை காரணமாக அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் விடுமுறை அளிக்கப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது
இருப்பினும் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு வெளியானால் மட்டுமே விடுமுறை உறுதிசெய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அரையாண்டுதேர்வுக்கு பின் நீண்ட விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது