Daily Horoscope
✕

மீண்டும் இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்கள்! – ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 17 மார்ச் 2022 (08:57 IST)
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பாசஞ்சர் ரயில் சேவைகளில் சிலவற்றை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் எக்ஸ்பிரஸ் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பாசஞ்சர் ரயில்களுக்கு முழு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மண்டல ரயில்வே நிர்வாகங்களின் வேண்டுகோளை ஏற்று அனைத்து மண்டலங்களிலும் குறிப்பிட்ட சில பாசஞ்சர் ரயில்களை மட்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் 111 ரயில்கள் இடம்பெற்றுள்ளன. மதுரை – செங்கோட்டை, நெல்லை – நாகர்கோவில் உள்ளிட்ட பாசஞ்சர் ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரயில்சேவைகள் எப்போது முதல் தொடங்கப்படுகிறது என அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments