செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2023 (07:26 IST)

காலாண்டு விடுமுறை முடிந்தது.. இன்று முதல் திறக்கப்படுகிறது பள்ளிகள்..!

தமிழகத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை இன்று முதல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும், காலாண்டு விடுமுறை முடிந்து, மாணவர்கள் பள்ளி திரும்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதன்படி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
 
ஆனால் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 8ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 1 முதல் 5 வகுப்பு வரை இன்று முதல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
 
 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுவதை அடுத்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளி செல்ல தயாராகி வருகின்றனர்.
 
Edited by Siva