செவ்வாய், 1 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 மார்ச் 2025 (15:55 IST)

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

pudhucherry
புதுச்சேரியை நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார்.
 
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, நகரங்களின் மக்கள்தொகை மற்றும் வருவாய் குறித்து திமுக உறுப்பினர் அனிபால் கென்னடி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.
 
அப்போது, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உருவாக்க அரசுக்கு திட்டமிருக்கிறதென அவர் தெரிவித்தார். இதற்குப் கூடுதலாக, அரியாங்குப்பம் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சிகளாக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தாகவே தொடரட்டும். நகராட்சியாக மாற்றினால் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம்” என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
 
Edited by Mahendran