துப்பாக்கிசூடு பயிற்சியில் சிறுவன் மீது பாய்ந்த குண்டு! – புதுக்கோட்டையில் பரபரப்பு!
புதுக்கோட்டையில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் துப்பாக்கிசூடு பயிற்சியின்போது குண்டு ஒன்று சிறுவனை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் துப்பாக்கிசூடு பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது வீரர் ஒருவர் சுட்ட குண்டு அந்த பகுதியில் இருந்த வீடு ஒன்றில் இருந்த சிறுவன் புகழேந்தியை தாக்கியுள்ளது.
இதனால் சிறுவன் அவசர சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.