Daily Horoscope
✕

5 லட்சம் செலவு செய்து கல்யாணம்: கணவனை காணவில்லை என புகார்!

Updated: செவ்வாய், 18 ஜூன் 2019 (08:47 IST)
ரூ.5 லட்சம் செலவு செய்து கல்யாணம் செய்த நிலையில் திடீரென கணவனை காணவில்லை என புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் என்ற பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் உள்ள பலநகரங்களிலும் சிறிய ஊர்களிலும் புதிய பேருந்து நிலையம் கட்டியிருந்தாலும், அந்த பேருந்து நிலையங்கள் பெயருக்கு மட்டுமே உள்ளன. அவைகளில் பேருந்துகள் வருவதே கிடையாது. அந்த வகையில் உள்ள ஒரு பேருந்து நிலையம்தான் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் என்ற பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு பேருந்து நிலையம்
 
இந்த பேருந்து நிலையம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து, சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிலையம் தொடங்கி வைக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஒருநாள் கூட அனைத்து பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை
 
இந்த நிலையில் புதிய பேருந்து நிறுத்தத்தின், அவல நிலையைச் சுட்டிக்காட்ட அந்த பகுதி மக்கள் பேருந்து நிலையத்தின் முன் ஒரு பிளக்ஸ் போர்டை வைத்துள்ளனர். அதில் 'கணவனைக் காணவில்லை' என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டு இந்த பேருந்து நிலையம் 'மெல்ல மெல்ல விதவையாகி வருகிறது' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனியும், பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்திற்கு வரவில்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments