திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:53 IST)

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு… மேலும் ஒரு எம் எல் ஏ ராஜினாமா!

புதுச்சேரி எம் எல் ஏ ஜான்குமார் சபாநாயகரை சென்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிர்ண்பேடிக்கும் இடையே அரசியலில் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அடுத்தடுத்த ராஜினாமாக்கள் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.