செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:38 IST)

புதிய தொழிற்கொள்கையை வெளியிடுகிறார் தமிழக முதல்வர்!

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புதிய தொழில் கொள்கைகளை இன்று நடக்கும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார் தமிழக முதல்வர்.

கொரோனா பரவலுக்கு பின் உலகெங்கும் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புதிய தொழிற் கொள்கை வகுக்கப்படும்  என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து இன்று சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி புதிய தொழிற்கொள்கைகளை வெளியிடுகிறார்.