செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:38 IST)

2 முறை எம் எல் ஏவாக இருந்தவர்… வசிக்க வீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு வீடு வழங்க வேண்டும் என முன்னாள் எம் எல் ஏ ஒருவர் மனு அளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நன்மாறன். அவர் இப்போது பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் உள்ளார். இந்நிலையில் அவர் தனக்கு வசிக்க வீடு வழங்கவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அவருடன் அவரின் மனைவியும் வந்திருந்தார்.