வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (14:22 IST)

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி, ஆனால்...

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 
திருவண்ணாமலையில் உலகப்புகழ் பெற்ற கார்த்திகை தீப விழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அண்ணாமலை கோவில் கார்த்திகை தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கார்த்திகை தீபம் விழாவுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தே திருவண்ணாமலை தீபத்தை தொலைக்காட்சி மூலம் கண்டு ரசிக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடர்பட்டது. 
 
இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த நிலையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதனால் அரசு குறிப்பிட்ட அளவிலான பக்கதர்கள் கிரிவலம் செல்ல அனுமதுக்கப்படுவார்கள் என தெரிகிறது.