புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2017 (09:52 IST)

குமரி மீனவர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; திருமாவளவன்

ஒகி புயலால் இறந்து போன மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஓகி புயலால் குமரி மீனவ மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். பல மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீனவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குமரிக்கு சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி ஓகியால் உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக 20 லட்சம் ரூபாய், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன், ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பதாக விமர்சித்தார். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லையென்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழக அரசு இறந்து போன மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையை 20 லட்சத்திலிருந்து 50 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என வலியுறித்தினார்.