1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (15:52 IST)

நாடு கடந்து வாழ்தலே கொடுமை தான்: குவைத் தீ விபத்து குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Suresh Kamatchi
குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட ஒரு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் இந்த விபத்து குறித்து கூறியதாவது:
 
இராப்பகலாய் உழைத்து ... குடும்பத்தை, சுற்றத்தை நிறைவுடன் வாழச் செய்ய, வறுமையை வெற்றிகொள்ள நாடு கடந்து வாழ்தலே கொடுமை. 
 
என்றாவது ஒருநாள் நிம்மதியாக அமர்ந்துண்ணுவோம் தன் நிலத்தில் என்ற நினைப்பே ஒவ்வொரு நிமிடத்தையும் நகரச் செய்யும். 
 
முகங்களிலும்.. அகங்களிலும் வாழும் தாகத்தை சுமந்து சென்ற தமிழர்கள் உட்பட இந்தியர்கள் 40 க்கும் மேற்பட்டோர் தீ விபத்தால்  உயிரிழந்த செய்தி கேட்டு மனங் கலங்குகிறது. அவர்கள் பட்ட துயரத்தைத் தாண்டி இந்த தீ துயரமும்...
 
இத் துயரச் செய்தியை அவர்களின் குடும்பங்கள் எப்படி தாங்குமோ? தெரியவில்லை. அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் அதேவேளையில் மீட்பு பணியும்... காயமடைந்தவர்களுக்கான சிறந்த மருத்துவ உதவியும் துரிதமாகக் கிடைத்திட அரசு ஆவண செய்ய வேண்டும்.  
 
அதேசமயத்தில் இறந்தவர்களின் உடல்களை  தாயகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் அரசு முடுக்கிவிடக் கேட்டுக்கொள்கிறேன்.  துயரத்தில் பங்கெடுப்போம். ஆன்மா நிம்மதிகொள்ள வேண்டிக்கொள்வோம்.
 
Edited by Mahendran