1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (07:42 IST)

தீ விபத்தில் 41 பேர் பலி.. குவைத் விரையும் மத்திய அமைச்சர்..!

குவைத்தில் நடந்த தீ விபத்தில் நேற்று 41 பேர் பலியானதாகவும் இதில் பலர் இந்தியர்கள் என்று கூறப்பட்டதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் குவைத் விரைவதாகும் அங்கு மீட்பு பணியை அவர் பார்வையிட போவதாகவும் கூறப்படுகிறது.

குவைத்தில் உள்ள 9 6 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இந்தியர்கள் உட்பட 41 பேர் பலியாகினார். தூங்கிக் கொண்டிருக்கும் போது புகையை சுவாசித்ததால் இறந்ததாக கூறப்படும் நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணியை கவனித்து வந்த நிலையில் தற்போது மத்திய வெளியுறவுத்துறைக்கான இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் உடனே குவைத் கிளம்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

அவர் நேரில் சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva