திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (10:58 IST)

சென்னையில் டிராபிக்கே இல்லை.. மக்கள் நிம்மதி.. தனியார் சேனலில் செய்தி..!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் சுத்தமாக இல்லை என்றும் மக்கள் நிம்மதியாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்றும் தனியார் நியூஸ் சேனலில் செய்தி வெளியாகியுள்ளது. 
 
கிட்டத்தட்ட அனைத்து சேனல்களிலும், அனைத்து ஊடகங்களிலும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஏராளமான வாகனங்கள் காரணமாக சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மேலும் இது குறித்த புகைப்படங்களும் வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஆனால் தனியார் நியூஸ் சேனலில் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் போது வழக்கமாக போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பாக தாம்பரம், பரனூர், பெருங்களத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று போக்குவரத்து நெரிசல் குறைவாக இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளது.
 
Edited by Mahendran