திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:34 IST)

பாகிஸ்தான் டிஷர்ட் அணிந்து வந்து சப்போர்ட் செய்த சென்னை ரசிகர்கள்… நெகிழ்ந்த பாகிஸ்தானியர்!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை மிக எளிதாக வென்று வரலாற்று சாதனைப் படைத்தது ஆப்கானிஸ்தான்.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்த இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி வாகை சூடியது.

இந்தியா ஆடாத இந்த போட்டியைக் காண, சென்னை ரசிகர்கள் ஆர்வமாக வந்து கலந்துகொண்டனர். மேலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் ஜெர்ஸிக்களை அணிந்து வந்து இரு அணிகளுக்கும் உற்சாகமும் தந்தனர். இதுபற்றி பேசிய பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் “வட இந்தியாவில் போட்டி நடந்த போது என்னால் பாகிஸ்தான் ஜெர்ஸி கூட வாங்க முடியவில்லை. மைதானத்தில் நான்கு பேருக்கு மேல் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இல்லை. ஆனால் சென்னையில் ரசிகர்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் கிரிக்கெட்டுக்கு மரியாதை கொடுப்பது சிறப்பானது” எனப் பேசியுள்ளார்.