1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.120 உயர்வு.. இன்னும் உயருமா?

Gold
தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5675.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 அதிகரித்து ரூபாய் 45400.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6145.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49160.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
ஆவடியில் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்து.. வந்தே பாரத் உள்பட ரயில் சேவைகள் பாதிப்பு..!