பிரதமர் மோடி ’குப்பை அள்ளியது’ விளம்பரத்துக்கானது - பிரபல நடிகை விமர்சனம்
சில நாட்களுக்கு முன் சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரும் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர். அப்போது மாமல்புரம் கடற்கரையில் இருந்த குப்பைகளை அள்ளினார். இதுகுறித்து நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார்.
பிரபல நடிகையும் மகிளா காங்கிரஸ் கட்சியின் தேசிய செயளாளரான குஷ்பு இன்று நன்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
மத்திய அரசை எதிர்த்து விமர்சனம் செய்தால்...அவர்களை தேசத் துரோகி என பட்டம் கொடுக்க தயாராக இருக்கிறது மத்திய அரசு. நாங்குநேரியில் அதிமுகவின் பணபலம் வெற்றி பெறாது. தற்போதுள்ள அதிமுக அரசு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் மோடி தமிழர் கலாச்சாரத்தை பறைசாற்றும் படி வேட்டி சட்டை அணிந்தது பாராட்டுதற்குரியது.ஆனால் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அருகிலுள்ள கடற்கடையில் குப்பை அள்ளியது விளம்பரம் எனத் தோன்றுகிறது. அதேசமயம் தூய்மை இந்தியா திட்டம் வரவேற்கத்தக்கது; இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.