செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (13:09 IST)

அரசு பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் – கட்டண விவரம்!

அரசு பேருந்துகளில் பார்சல் சேவைக்கு ரூ.210 முதல் ரூ.390 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அரசு பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்த நிலையில் இன்று முதல் அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து அரசு பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் சேவை தொடங்கப்படுகிறது என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

இந்த அரசு பேருந்துகளில் பொதுமக்கள் தினசரி மற்றும் மாத வாடகை மூலம் பார்சல் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதற்காகவே நியாயமான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனங்களின் லாரிகளில் தான் பார்சல்கள் அனுப்பப்பட்டு வரும் நிலையில் இனி, அரசு பேருந்துகளில் குறைந்த கட்டணத்தில் அனுப்பிக் கொள்ளலாம் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பார்சல் சேவைக்கு ரூ.210 முதல் ரூ.390 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 80 கிலோ வரையிலான பார்சல்களுக்கான விவரம் பின்வருமாறு…

திருச்சி முதல் சென்னை வரை ரூ.210,
மதுரை முதல் சென்னை வரை ரூ.300,
நெல்லை முதல் சென்னை வரை ரூ.390,
தூத்துக்குடி முதல் சென்னை வரை ரூ.390,
செங்கோட்டை முதல் சென்னை வரை ரூ.390,
கோவை முதல் சென்னை வரை ரூ.330,
ஒசூர் முதல் சென்னை வரை ரூ.210