வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (12:13 IST)

மோசமான வானிலை; குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து!

கோயம்புத்தூர் சென்றுள்ள குடியரசு தலைவர் இன்று நீலகிரி செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நேற்று ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து இன்று அவர் குன்னூர் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் வழியாக அவர் குன்னூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் குன்னூரில் ஏற்பட்டுள்ள மேகமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக குடியரசுத் தலைவரின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K