ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 மார்ச் 2024 (14:02 IST)

கூட்டணி யாருடன்? பிரேமலதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

வரும் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளும் பாஜக அல்லது அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிகளில் ஒன்றில் இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுவரை எந்த ஒரு தெளிவான அறிவிப்பும் கட்சி தலைமையிடம் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கூட்டணி தலைமையிடமும் தேமுதிக மற்றும் பாமக பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும் பாமக கிட்டத்தட்ட பாஜக கூட்டணியில் இணைவது உறுதி செய்யப்பட்டு விட்டபோதிலும் தேமுதிக இன்னும் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய போவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூட்டணி குறித்து செய்திகள் தலைமைக் கழகம் அறிவிக்கும் அறிவிப்புதான் உண்மையானது என்றும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளிவருகிறது என்றும் தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளார்
 
 இதனை அடுத்து இன்னும் கூட்டணி குறித்த எந்த முடிவையும் தேமுதிக எடுக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran