புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (11:39 IST)

அதிமுகவுக்கு நேரடி நெருக்கடி: பொறுமை இழந்து பொங்கிய பிரேமலதா!!

இன்னும் இரு தினகங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எங்கள் உரிமையை கேட்போம் என பிரேமலதா பேட்டியளித்துள்ளார். 
 
ஏப்ரல் மாதத்தில் 3 மாநிலங்களவை எம்பி பதவி காலியாகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தில் அடிப்படையில் திமுக, அதிமுகவில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.  
 
தற்போது இந்த பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர்கள் ஒரு பக்கம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் எம்பிக்க்ள் யாரும் இல்லை என வர்கள் பக்கம் போர்கொடி தூக்கியுள்ளனர்.  
 
போதாத குறைக்கு தேமுதிகவும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது என செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரேமலதா சமீபத்தில் இது குறித்து பேட்டியளித்துள்ளார்.
 
அவர் கூறியதாவது, தேர்தலில் கூட்டணி அமைக்கும் போது அதிமுகவினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக கூறினார்கள். நாங்கள் தர்மத்தோடு இருக்கிறோம். இன்னும் இரு தினகங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எங்கள் உரிமையை கேட்போம் என தெரிவித்துள்ளார்.
 
எனவே இது அதிமுக தலைமைக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.