வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (13:52 IST)

சிஏஏ எதிர்ப்பு சக்சஸ் ஆனா, அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்: எச் ராஜா சர்ச்சை !!

சிஏஏ எதிராக நிறைவேற்றப்பட்டால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. 
 
சமீபத்தில் சிஏஏவுக்கு ஆதரவாக திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் எச் ராஜா அங்கு பின்வருமாரு பேசினார், திமுக இந்து விரோத கட்சியே அல்ல என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஸ்டாலின் பால் குடம் எடுக்கும் வரை இதனை நான் நம்பமாட்டேன்.
 
அதேபோல தமிழக சட்டசபையில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கோரிவருகிறார். அப்படி சிஏஏ-வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 
 
இதற்கு முன்னர், லயன்ஸ் கிளப்பிலோ இல்லை வேற ஏதாவது ரெகிரியேஷன் கிளப்பிலோ சிஏஏ சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றினால் அது எப்படியோ அதே மாதிரிதான் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதும் என பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.