1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 டிசம்பர் 2020 (14:35 IST)

எம்ஜிஆரை குருவாக ஏற்று கொண்டவர் விஜயகாந்த் மட்டுமே: பிரேமலதா

எம்ஜிஆரை குருவாக ஏற்று கொண்டவர் விஜயகாந்த் மட்டுமே
எம்ஜிஆரை குருவாக ஏற்றுக் கொண்டவர் விஜயகாந்த் மட்டுமே என்றும் தற்போது எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்தார்கள்? என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வி எழுப்புவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கிறிஸ்மஸ் தினத்தை அடுத்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பிரேமலதா அதன் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ’கருப்பு எம்ஜிஆர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு மக்களாகவே கொடுத்தது என்றும் ஜானகி எம்ஜிஆர் அவர்கள் தனது பிரசார வாகனத்தை விஜயகாந்திற்கு தான் கொடுத்தார் என்றும் கூறினார்
 
மேலும் விஜயகாந்த்தான் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை செய்து வருகிறார் என்றும் புதிதாக எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடும் கட்சியினர் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள்? என்றும் கமல்ஹாசனை மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார்
 
மேலும் வரும் தேர்தலில் தேமுதிக எந்த அணியில் இடம் பெறுகிறதோ அந்த அணிதான் வெற்றிபெறும் என்று கூறிய அவர் அதிமுக பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தரும்படி இதுவரை எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று கூறினார் 
 
எம்ஜிஆரை உரிமை கொண்டாடுவதற்கு விஜயகாந்த் மட்டுமே பொருத்தமானவர் என்று பிரேமலதா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது