வீட்டில் கொரோனா ஸ்டிக்கர்... ரகளை செய்த வேலையாட்கள்? பிரேமலதா விளக்கம்!!
வீட்டில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து பதில் அளித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து பேசியுள்ளார்.
அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். சிறு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். வீட்டில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், வீட்டில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், மாநகராட்சி ஸ்டிக்கர் ஒட்ட தடை சொல்லவில்லை. ஸ்டிக்கர் ஒட்டினார்கள் அது கீழே விழுந்துவிட்டது அதனால் அதைஅ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்று தான் தகவல் வந்தது.
பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு மறுப்பு தெரிவித்தது குறித்து தெரியவில்லை. ஸ்டிக்கர் ஒட்டுவதால் ஒன்றும் இல்லை. தேமுதிக அரசின் விதிமுறைகளை பின்பற்றுகிறது. விஜயகாந்த உடல்நலம் குறித்து விசாரித்த முதலவர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்திற்கு நன்றி என தெரிவித்தார்.