செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (13:37 IST)

தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை நேற்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தனர் என்பதும், இந்த சந்திப்பின்போது சுனில் மற்றும் ஆதவ் அர்ஜூனா இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக அவர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழக தேர்தல்  செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்ததாகவும் இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வியூகம் அமைப்பது குறித்தும், கூட்டணி அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கூட்டணியில்  எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய்யை அடுத்து அவருடைய கட்சியின் நிர்வாகிகளையும் பிரசாந்த் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அடுத்தடுத்த சந்திப்பால் அவர் வரும் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக செயல்பட போவதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva