செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (09:13 IST)

அஞ்சல் நிலையமாக மாற்றப்படும் வானொலி நிலையங்கள்!? – ரேடியோ நேயர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் உள்ள 4 உள்ளூர் வானொலி நிலையங்களை தரம் குறைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் அகில இந்திய வானொலி இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மொழிகளில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி சமீப காலமாக போதிய வருவாய் இல்லாத வானொலி நிலையங்களை வேறு நிலையங்களில் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்யும் நிலையமாக தரம் குறைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுச்சேரியில் உள்ள உள்ளூர் அகில இந்திய வானொலி நிலையங்களும் இவ்வாறு தரம் குறைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் உள்ளூரில் நடக்கும் செய்திகள், தகவல்களை ரேடியோவில் கேட்டு வரும் நேயர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த தரக்குறைப்பு நடவடிக்கையால் பலர் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.