1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK and BJP discuss about Local body election

தேர்தலில் யாருக்கு எவ்வளவு இடங்கள்? – அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை!

Tamilnadu
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்ள அதிமுக – பாஜக திட்டமிட்டுள்ளது. இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் பகுதிகள் பங்கீடு குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுக – பாஜகவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இரு கட்சிகளும் போட்டியிடும் பகுதிகள் குறித்த பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி போடலைனா இந்த பக்கமே வரக்கூடாது! – கறார் காட்டும் கொடைக்கானல்!