வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2020 (19:31 IST)

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது செய்முறை தேர்வு? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த கல்வி ஆண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் இனிமேலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு என்று சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறினார்
 
இந்த நிலையில் தற்போது 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய பாடத் திட்டங்களின் அடிப்படையில் தான் செய்முறை தேர்வு மற்றும் தேர்வு கேள்வி தாள்கள் இருக்கும் என்றும் இது குறித்து முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி செய்முறை தேர்வு மற்றும் பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்