செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (20:57 IST)

பள்ளிக்கு உதவுங்கள் முன்னணி நடிகை கோரிக்கை!

மதுரையில் உள்ள பள்ளிக்கு உதவுங்கள் பாலிவுட் முன்னணி நடிகை கத்ரினா கைஃப் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், எனது தாய் மற்றும் அறக்கட்டளையால் கட்டப்பட்ட பள்ளியைப் பற்றிக் கூறிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 கடந்த  2015 ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மதுரையில் செயல்பட்டும் வரும் மவுண்டன் வியூ பள்ளியில் ஏழைக்குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200 குழந்தைகள் தற்போது படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும். எனவே இங்கு பதினான்கு வகுப்பறைகள் கட்டப்படவேண்டும். அதற்காக அனைவரும் உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.