1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:59 IST)

அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் தடை ; 2 பேர் பணியிட மாற்றம்

duraimurugan
அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் தடை ஏற்பட்டது தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக  நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று, வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி அரசுப் பள்ளியில், மிதிவண்டி வழங்கும் நிகழ்சில் திடீரென்று மின் சாரம் தடை பட்டது.

அந்த நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக இருமுறை மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, அமைச்சர் விழாவிலேயே மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்டது தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செயப்பட்டுள்ளனர். காட்பாடி மின் நிலைய உதவி பொறியாலர் ரவிகிரண், மற்றும் சிட்டி பாபு ஆகிய இருவரும் வடிகன்தாங்கல் துணை மின் நிலையத்திற்கு பணியிட மாற்ற்ம் செய்யப்பட்டுள்ளனர்