1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2022 (22:20 IST)

'அக்னி பத்' திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: வேலூரில் இளைஞர்கள் ஆர்வம்!

Agneepath
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த  'அக்னி பத்' திட்டத்திற்கு ஆள் எடுக்கும் பணி வேலூரில் நவம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது 
 
இதனை அடுத்து வேலூர் மற்றும் அதை சுற்றி உள்ள இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் புதிய ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
விண்ணப்பதாரர்கள்,www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தில் ஆக்ஸ் 5-ந்தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர். விண்ணப்பத்துக்கான பதிவு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதியுடன் நிறைவடைகிறது. 
 
நுழைவு அட்டை நவம்பர் 1-ந்தேதி ஆன்லைன் முறையில் வழங்கப்படும். அன்றைய தினம் முதல் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்திலும், பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரியிலும் விண்ணப்பதாரர்கள் நுழைவு அட்டையை சோதித்துக் கொள்ளலாம்.