வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (18:09 IST)

டீக் கடையில் திடீரென்று சிலிண்டர் வெடித்து விபத்து....

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே டீக் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானது. இதில், 5 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வானபாடி என்ற கிராமத்தில் உள்ள செல்வராஜ்(58) என்ற நபருக்குச் சொந்தமான  தே நீர் கடை  ஒன்றில் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில், ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். தற்போது 5 பேர் வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திடீர் விபத்து தொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.