1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:12 IST)

தவெக மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்.. ஆய்வுக்கு பின் காவல்துறை தகவல்?

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி என்ற பகுதியில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் கொடியை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக முதல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான காவல்துறை அனுமதிக்கான மனு அளிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தரப்பில் குறிப்பிடப்பட்ட இடத்தை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு பெற்றுள்ளதாகவும் வாகனங்கள் நிறுத்த சுமார் 75 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில் என்ன சிக்கல் என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை கூறவில்லை.

இருப்பினும் இதே இடத்தில் மாநாடு நடத்த தமிழக வெற்றி கழகம் தேவையான நடவடிக்கை எடுக்குமா அல்லது வேறு இடம் மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran