வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (08:47 IST)

GOAT நான்காவது சிங்கிளில் நடனமாடப் போகும் ‘டி ஏஜிங்’ விஜய்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதே போல விஜய்யை 20 வயது இளைஞராகக் காட்டும் டி ஏஜிங் லுக்கும் படத்தில் உள்ளது. இவையிரண்டும் படத்தைப் பார்க்க தூண்டும் காரணிகளாக அமைந்துள்ளன. இதுவரை படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கோட் படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் நாளை யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த பாடலில் ஒரு இனிய அதிர்ச்சியாக டி ஏஜிங் லுக்கில் உள்ள விஜய் நடனமாட உள்ளாராம். துள்ளலான ஒரு பாடலாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை வெளியான பாடல்கள் எல்லாம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இந்த பாடலாவது ரசிகர்களைக் கவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.