வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (16:54 IST)

ஹெல்மெட்டில் கேமிரா.. சென்னை காவல்துறை எச்சரிக்கை..!

4 வயது குழந்தைக்கும் ஹெல்மெட் கட்டாயம்: புதிய உத்தரவு!
கேமரா பொருத்தப்பட்டுள்ள ஹெல்மெட் விற்பனை அதிகமாகி வரும் நிலையில் சென்னை காவல்துறை இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் கேமிரா பொருத்தப்பட்ட ஹெல்மெட் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இருசக்கர வாகன ஓட்டிகள் இதனை அதிகம் பயன்படுத்துவதாகவும் காவல்துறைக்கு தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து விதிமுறைகளை மீறி கேமரா ஹெல்மெட் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. 
 
ஒரு சில குறிப்பிட்ட பைக்கர்ஸ் அறக்கட்டளைக்கு மட்டுமே ஹெல்மெட்டில் கேமரா பொருத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் முறையான அனுமதி இன்றி கேமரா ஹெல்மெட்டை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
ஒரு சில இளைஞர்கள் பைக் ரேஸ் வீலிங் போன்ற செயல்களில் ஈடுபடும்போது கேமரா ஹெல்ப்பேட்டை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் இது குறித்து தகவல் தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva