வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 9 மார்ச் 2023 (18:07 IST)

கூகுள் பேவில் நூதன மோசடி.. தமிழக காவல்துறை எச்சரிக்கை..!

upi paynow
தற்போது ஏராளமானோர் கூகுள் பே என்ற செயலியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து வரும் நிலையில் அதில் நூதனமான மோசடி நடப்பதாக தமிழக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
 
தற்போது புதிய மோசடி ஜிபேவில் தொடங்கியுள்ளது. யாரோ ஒருவர்‌ தெரிந்தே உங்கள்‌ கணக்கு அல்லது கூகுள்பேவுக்கு பணத்தை அனுப்புகிறார்‌, மேலும்‌ உங்கள்‌ கணக்கில்
தவறுதலாக பணம்‌ அனுப்பி இருந்ததாக உங்களுக்கு தெரிவிக்க உங்களை அழைக்கிறார்,
 
மேலும்‌ பணத்தை அவர்களின்‌ எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார்‌. நீங்கள்‌ பணத்தை திருப்பி அனுப்பினால்‌, உங்கள்‌ கணக்கு ஹேக் செய்யப்படும்‌. எனவே, யாராவது உங்கள்‌ கணக்கில்‌ தவறாக‌ பணம்‌ பெற்றிருந்தால்‌,அழைப்பாளரிடம்‌ அடையாளச்‌ சான்றுடன்‌ அருகிலுள்ள காவல்‌ நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக்‌ கொள்ளச்‌ சொல்லுங்கள்‌. இந்த மோசடி இப்போதுதான்‌ தொடங்கியுள்ளது என்பதை கவனத்தில்‌ கொள்ளவும்‌.
 
Edited by Siva