மாணவி மரணம் விவகாரம்: வதந்தி பரப்பிய யூடியூபர்களை தேடும் சிறப்பு புலனாய்வுக்குழு
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரம் தொடர்பாக யூடிபில் செய்திகளையும் வதந்திகளையும் பரப்பிய யூடியூப் உரிமையாளர்களை காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த செய்திகள் ஊடகங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூபில் வேகமாக பரவியது
இந்த நிலையில் மாணவி மரணம் குறித்து யூடியூப்ல் வதந்தி செய்திகள் பரப்பியவர்கள் கண்டறிந்து புலனாய்வு குழு நடவடிக்கை எடுக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நீதிமன்ற விசாரணைக்கு இணையாக விசாரணை நடத்தும் யூடியூப் சேனல்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது