வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

டாஸ்மாக்கை முற்றுகையிட வாய்ப்பு… போலிஸ் பாதுகாப்புடன் திறக்கப்படுமாம்!

தமிழகத்தில் 35 நாட்களுக்குப் பின்னர் இன்று டாஸ்மாக் கடைகள் 27 மாவட்டங்களில் திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இன்று ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை  5 மணிவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பொதுமக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு போலிஸார் பாதுகாப்பு கொடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.